கலெக்டர் அலுவலகத்துக்கு தூக்குக்கயிறுடன் வந்த பெண்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றபோது தூக்குக்கயிறுடன் பெண் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக உப்புக்கோட்டையை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ராதா என்பவர் தனது கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டியபடி வந்தார். அவர் தனது மகன் சூர்யபிரகாசையும் (வயது 15) அழைத்து வந்து இருந்தார்.
சொத்து பிரச்சினையில் தூக்குப்போடுவதற்காக கயிறுடன் வந்ததாக அவர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சொத்துப்பிரச்சினையில் தனது கணவரின் சகோதரர்கள் 2 பேர் தன்னையும், கணவரையும் தாக்கியதாகவும், வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்த போது போலீசார் புகாரை வாங்கவில்லை என்றும் கூறினார்.
பின்னர், ராதாவையும், அவருடைய மகனையும் போலீசார் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story