‘மோசமான காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது’ அமித்ஷா கடும் தாக்கு
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வந்தார். கர்நாடகத்தில் காங்கிரசின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டதாக அமித்ஷா கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்துள்ளார். நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து அவர் ஹெலிகாப்டர் மூலமாக துமகூருவுக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் காலை 11 மணியளவில் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு அமித்ஷா சென்றார். அவருடன் மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரி அனந்தகுமார் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் உடன் சென்றார்கள்.
பின்னர் சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமியை சந்தித்து அமித்ஷா ஆசி பெற்றார். மேலும் சிவக்குமார சுவாமியின் காலில் விழுந்து அமித்ஷா வணங்கினார். 15 நிமிடங்கள் மடத்தில் இருந்த அமித்ஷா, சிவக்குமார சுவாமியின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார். பின்னர் அவர் அங்கிருந்து திப்தூருக்கு புறப்பட்டார். முன்னதாக மடத்தில் வைத்து அமித்ஷா நிருபர்களிடம் கூறியதாவது.
சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமியை சந்தித்து ஆசி பெற்றதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது. அவரது ஆசி எனக்கும், பா.ஜனதாவுக்கும் புதிய பலத்தை கொடுத்துள்ளது. எடியூரப்பா தலைமையிலேயே பா.ஜனதா சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு மிகவும் மோசமான ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த மோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
அதனால் காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதுடன், பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கவும் தயாராகி விட்டார்கள். மக்களிடையே பா.ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான ஆட்சியால் நாட்டில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடைபெற்றது. தற்போது எந்த வளர்ச்சி பணிகளும் நடை பெறவில்லை. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
இதற்கிடையில், சித்தகங்கா மடத்திற்கு அமித்ஷா வருவதை அறிந்ததும், அங்கு ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் குவிந்திருந்தார்கள். ஆனால் அவர்களை மடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அமித்ஷாவுடன் குறிப்பிட்ட நபர்கள் செல்வதற்காக அடையாள அட்டை (பாஸ்) வழங்கப்பட்டு இருந்தது. அடையாள அட்டை இல்லாதவர்கள் மடத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் தங்களையும் அமித்ஷாவுடன் மடத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் வேறு கட்சிகளில் இருந்து பா.ஜனதாவில் இணைந்தவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். உடனே அவர்களுடன் போலீசாரும், பா.ஜனதா தலைவர்களும் சமாதானமாக பேசினார்கள். இதனால் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றார்கள். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு உண்டானது.

Related Tags :
Next Story