காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் மத்திய அரசு, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை கூட்டம் முடிவடைந்த பின்னர் சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி சட்டசபையில் அரசின் 4 மாத கால செலவினங்களுக்காக ரூ.2,466 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி பெறப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு அளித்த காலக்கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
இல்லையென்றால், மறுநாளே மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும் அதைப்பற்றி, புதுவை காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை. புதுவை மக்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். அதனால் கர்நாடகத்துக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்வோம்.
மத்திய அரசு எங்களுக்கு தெரிவிக்காமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நேரடியாக நியமித்துள்ளது. இதனை எதிர்த்து முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க.வை சேர்ந்த தனலட்சுமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிப்பதற்கான விதி என்ன? அவர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான தகுதி என்ன? அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என 4 கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதற்கான விளக்கம் ஏதும் இல்லை. இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன் பின்னர் 3 பேரின் நியமனம் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதுவை அரசும் சட்டசபை செயலாளர் மூலம் சபாநாயகரை வாதியாக சேர்த்து வழக்கை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த 2 தீர்மானங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த என்.ஆர். காங்கிரஸ் அரசு வாங்கிய கடனைத்தான் திருப்பி செலுத்தி வருகிறோம். இதுவரை ரூ.500 கோடி கடனை திருப்பி செலுத்தியுள்ளோம். மத்திய அரசோடு இணக்கமாகத்தான் உள்ளோம். இருப்பினும், மாநில வளர்ச்சிக்கு நிதியுதவி தரவில்லை. அதையும் மீறி புதுவை அரசு 9.8 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா உள்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. எவ்வளவு நிதி தட்டுப்பாடு இருந்தாலும் அதனை சமாளித்து அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கி வருகிறோம்.
சில திட்டங்கள் காலதாமதம் ஆனாலும் தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மத்திய அரசோடு புதுவை அரசுக்கு மோதல் இல்லை. நான் டெல்லி செல்லும் போதெல்லாம் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி வழங்கும்படி கோரிக்கை வைத்து வருகிறேன். ஆனால் இதுவரை நிதி வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story