குடிசை மாற்று வாரிய வீடுகளை வெளிநபர்களுக்கு ஒதுக்கீடு செய்து முறைகேடு கலெக்டரிடம் மனு
திருச்சி செங்குளம் காலனியில் குடிசை மாற்று வாரிய வீடுகளை வெளிநபர்களுக்கு ஒதுக்கீடு செய்து முறைகேடு நடந்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது திருச்சி செங்குளம் காலனி (பீச்சாங்குளம்) குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் பாதுகாப்பு நல சங்கத்தின் செயலாளர் அங்கமுத்து தலைமையில் ஏராளமானவர்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
செங்குளம் காலனியில் உள்ள வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட திட்டமிட்ட போது மாற்று திட்டம் கேட்ட எங்களில் பலர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். நாங்கள் அப்போது சிறையில் இருந்ததால் வீடுகள் ஒதுக்குவதற்காக எங்களை புகைப்படம் எடுக்கவில்லை. இதை ஒரு காரணமாக வைத்து எங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுக்க சென்றபோது அவர்கள் எங்களை கண்டு கொள்ளவில்லை. இந்த காலனியை சேர்ந்த எங்களுக்கு வீடு ஒதுக்காமல் வெளியில் இருந்து வந்தவர்கள், அரசாங்க பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே குடும்பத்துக்கு 3 வீடுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த முறைகேடுகளை கண்டு பிடித்து அதனை ரத்து செய்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து தர உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சமூக நீதி பேரவை சார்பில் அதன் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், அல்லித்துறை, புங்கனூர் மற்றும் இதனை சுற்றியுள்ள ஊராட்சிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அல்லித் துறையில் இருந்து திண்டுக்கல் பைபாஸ் சாலையை இணைக்கும் தார் சாலையில் அதிக கனரக வாகனங்கள் செல்வதாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் அந்த சாலை குண்டும் குழியுமாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி அல்லித்துறையில் இருந்து சாந்தபுரம், புங்கனூர் வழியாக ராம்ஜிநகர் மில் ஸ்டாப் வரை உள்ள தார் சாலையை செப்பனிட்டு சீரமைக்க உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
மேலும் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களும் கலெக்டரிடம் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story