ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டியில் பயிர்க்காப்பீட்டு தொகை முறையாக வழங்கப்படவில்லை விவசாயிகள் புகார்


ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டியில் பயிர்க்காப்பீட்டு தொகை முறையாக வழங்கப்படவில்லை விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 27 March 2018 2:45 AM IST (Updated: 27 March 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதிகளில் பயிர்க்காப்பீட்டு தொகை முறையாக வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சத்திரப்பட்டி,

பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2016–17–ம் ஆண்டு ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, போடுவார்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தனர். இதற்கான காப்பீட்டு தொகையையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தி வந்தனர்.

பருவமழை முறையாக பெய்யாததால் 2016–17–ம் ஆண்டில் விளைச்சலும் குறைந்தது. இதையடுத்து தங்களுக்கான காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி போடுவார்பட்டியை சேர்ந்த விவசாயிகளுக்கு தற்போது காப்பீட்டு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த காசோலைகளில் ரூ.20, ரூ.48, ரூ.80 மட்டுமே இழப்பீட்டு தொகையாக கொடுப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீட்டு தொகை முறையாக வழங்கப்படவில்லை.

காப்பீட்டு நிறுவனம் எந்த கணக்கீட்டின் அடிப்படையில் இந்த தொகையை அளித்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story