ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள் - 119 காலியிடங்கள்
ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 119 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் பேங்க். சுருக்கமாக எஸ்.பி.ஐ. என குறிப்பிடப்படும் இந்த வங்கி ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த ஆண்டும் பல ஆயிரம் கிளார்க் பணியிடங்களையும், நூற்றுக்கணக்கான சிறப்பு அதிகாரி பணியிடங்களையும் நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சில பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 119 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஸ்பெஷல் மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பணிக்கு 35 பேரும், டெபுடி ஜெனரல் மேனேஜர் (சட்டம்) பிரிவில் 2 பேரும், டெபுடி மேனேஜர் (சட்டம்) பிரிவில் 82 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 25 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 52 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 31-12-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
ஸ்பெஷல் மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பணிக்கு சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., ஏ.சி.எஸ்., எம்.பி.ஏ. படிப்புடன், முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டெபுடி ஜெனரல் மேனேஜர் மற்றும் டெபுடி மேனேஜர் பணிக்கு சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
ஸ்பெஷல் மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பணிக்கு நேர் காணல் மூலமும், மற்ற பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில் சுயவிவரப் பட்டியல், அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ், அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட அவசியமான சான்றுகள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 7-4-2018-ந் தேதியாகும். இதற்கான தேர்வு உத்தேசமாக 6-5-2018 அன்று நடைபெறு கிறது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Related Tags :
Next Story