‘கிளாட்’ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?


‘கிளாட்’ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
x
தினத்தந்தி 27 March 2018 12:32 PM IST (Updated: 27 March 2018 12:32 PM IST)
t-max-icont-min-icon

சட்டப் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வாக கிளாட் (CLAT) தேர்வு, கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

 பிளஸ்-2 படித்துவிட்டு சட்டம் (எல்.எல்.பி.) படிக்க விரும்புபவர்கள், எல்.எல்.எம். எனப்படும் சட்ட முதுநிலை படிப்பு படிக்க விரும்புபவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். நாடு முழுவதும் உள்ள 18 சட்டப் பல்கலைக்கழகங்களில் இந்த தேர்வின் மூலம் சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கிளாட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை சட்ட அதிகாரியாக பணி நியமனம் செய்து கொள்கிறது.

2018-ம் ஆண்டுக்கான ‘கிளாட்’ தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பரிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஜனவரி 1 முதல், மார்ச் 31-ந் தேதிவரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். கிளாட் தேர்வு வருகிற மே மாதம் 13-ந் தேதி நடக்க உள்ளது. கிளாட் தேர்வு மொத்தம் 200 கேள்விகள், 200 மதிப்பெண்களைக் கொண்டது. பொது அறிவு, லீகல் ஆப்டிடியூட் பிரிவுகளில் தலா 50 கேள்விகளும், ஆப்டிடியூட் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் பிரிவுகளில் தலா 40 கேள்விகளும், இதர பகுதிகளில் இருந்து 20 கேள்விகளும் இடம் பெறும். அதிக மதிப்புமிக்கதான நீதித்துறையில் தங்கள் வாழ்க்கைப் பாதையை உருவாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு தயாராகலாம்.

Next Story