தனியார் குடியிருப்போர் சங்கத்தில் ரூ.35 லட்சம் மோசடி: வங்கி உதவி மேலாளர் கைது


தனியார் குடியிருப்போர் சங்கத்தில் ரூ.35 லட்சம் மோசடி: வங்கி உதவி மேலாளர் கைது
x
தினத்தந்தி 28 March 2018 3:30 AM IST (Updated: 28 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

தனியார் குடியிருப்போர் சங்கத்தில் ரூ.35 லட்சம் மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக வங்கி உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை சவுரிபாளையம் ராஜீவ்காந்தி நகரில் ‘கிரீன்பாரடைஸ்’ என்ற தனியார் குடியிருப்போர் சங்கம் உள்ளது. இதன் தலைவராக ராதாகிருஷ்ணன், நிர்வாகிகளாக ராஜகோபால், சின்னத்துரை ஆகியோர் உள்ளனர். இந்த சங்கத்தில் ராதாகிருஷ்ணன் போல போலி கையெழுத்து போட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் குடியிருப்போர் சங்க கணக்கில் இருந்த ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தெரிகிறது.

அப்போது, வங்கி உதவி மேலாளர், கையெழுத்தை சரி பார்க்காமல் பணத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இதுபோன்ற மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடி பற்றிய விவரம் தெரிந்ததும், சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் விசாரணை நடத்தி, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் ராஜகோபால், சின்னத்துரை, வங்கி உதவி மேலாளர் மிதின்குமார் ஜா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், வங்கி உதவி மேலாளர் மிதின்குமார் ஜா நேற்று இரவு கைது செய்யப்ப

Next Story