தாரமங்கலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் மர்மசாவு போலீசார் விசாரணை


தாரமங்கலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் மர்மசாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 March 2018 3:45 AM IST (Updated: 28 March 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

தாரமங்கலம்,

தாரமங்கலம் 5-வது வார்டு எம்.ஜி.ஆர்.காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சேட்டு என்ற தமிழ்செல்வன்(வயது27). கல் உடைக்கும் தொழிலாளி. திருமணம் ஆகாதவர். தமிழ்செல்வனுக்கும் அவரது பெரியப்பா மகன் சிவமூர்த்திக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

கடந்த 3-ந் தேதி இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தமிழ்செல்வன் தாக்கியதில் சிவமூர்த்தி காயம் அடைந்தார். அதையொட்டி அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர்.

மர்மசாவு

இதைத்தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ்நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கடந்த 20-ந்தேதி தமிழ்செல்வன் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்படி அவர் தினமும் தாரமங்கலம் போலீஸ்நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கிய தமிழ்செல்வன் நேற்று காலை பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இந்தநிலையில் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது என்றும், சிவமூர்த்தி மீது சந்தேகப்படுவதாகவும் தந்தை ஜெகநாதன் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story