முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து துணிகரம் தம்பதியை மிரட்டி நகை- பணம் பறிப்பு தப்பிச் சென்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
மோட்டார் சைக்கிளில் வந்து தம்பதியிடம் நகை- பணம் பறித்து விட்டு தப்பிச் சென்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
நெல்லை,

முக்கூடல் அருகே நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நகை- பணம் பறிப்பு
நெல்லை மாவட்டம் பாப்பான்குளம் அருகே உள்ள மயிலப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். அவருடைய மனைவி ரேணுகா (வயது28). இவர்கள் நேற்று மதியம் தங்களது 3 வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தனர்.
முக்கூடல் அருகே உள்ள இடைகால் காட்டுப்பகுதியில் வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சுரேஷ் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் சுரேஷ், அவருடைய மனைவியை மர்மநபர்கள் மிரட்டி நகை- பணத்தை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
அந்த வழியாக வந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை சுரேஷ் கூறினார். உடனே அவர்கள் கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். இதனை அறிந்த சுரேஷின் உறவினர்களும் கொள்ளையர்கள் சென்ற திசையை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். கடையம் அருகே முதலியார்பட்டி பகுதியில் கொள்ளையர்களை அவர்கள் பார்த்தனர். தங்களை பொதுமக்கள் துரத்துவதை அறிந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அங்குள்ள வயலில் இறங்கி தப்பி ஓடினர்.
அப்படி இருந்தும் பொதுமக்கள் கொள்ளையர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கடையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடையம் போலீசார் பாப்பாக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாப்பாக்குடி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமையன்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (22), மதன் என்ற முத்துக்குமார் (24) ஆகிய இருவர் என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் முக்கூடல் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story