கிழக்கு கடற்கரை சாலையில் வாலிநோக்கம் உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை தனியாருக்கு விட எதிர்ப்பு, மறியலில் ஈடுபட்ட 470 பேர் கைது


கிழக்கு கடற்கரை சாலையில் வாலிநோக்கம் உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை தனியாருக்கு விட எதிர்ப்பு, மறியலில் ஈடுபட்ட 470 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2018 4:15 AM IST (Updated: 28 March 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

வாலிநோக்கம் உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை தனியாருக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்ய முயன்ற 270 பெண்கள் உள்பட 470 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாயல்குடி,

சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் செயல்படும் உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை தனியார் மயமாக்க முயற்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிலாளர்கள் வாலிநோக்கம் கிழக்கு கடற்கரை சாலை விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ராமநாதபுரம் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார்.

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, கடலாடி கிழக்கு வட்டார தலைவர் தனசேகரன், சாயல்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், அரசு உப்பு நிறுவன தொழிலாளர் சங்க தலைவர் பச்சமால் ஆகியோர் பேசினர்.

அப்போது உப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்ததும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அமிர்தலிங்கம், கடலாடி தாசில்தார் முத்துலட்சுமி, கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசந்திரன், சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜோக்கின்ஜெரி ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்ட 270 பெண்கள் உள்பட 470 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story