விவசாய மையம் என்ற பெயரில் கிராம பெண்களிடம் பணம் வசூலித்து மோசடி
விவசாய மையம் என்ற பெயரில் கிராம பெண்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடமும், போலீஸ் சூப்பிரண்டிடமும் மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர்,
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கிராம பெண்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு இந்திய பாரம்பரிய வேளாண்மை மையம் என்ற நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தலைமையில் செயல்படு வதாக கூறி வத்திராயிருப்பு பகுதியில் நெடுங்குளம், கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், அம்மச்சியாபுரம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, மாத்தூர், வலையங்குளம், சேதுநாராயண புரம், கொண்டையம்பட்டி, சுரைக்காய்பட்டி, காடனேரி, அம்மாபட்டி, களத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விதை, பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடு பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும் விவசாயிகளுக்கு பாரம்பரிய விவசாய முறை பற்றி பயிற்சி அளிக்கப்படும் என்றும் களப்பணியாளர்கள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.
இந்த மையத்தின் களப்பணியாளர்கள் வசந்தராஜன், தமிழரசி, கலாநிதி ஆகியோர் கிராம பெண்களிடம் மாதம் ரூ.115 வீதம் 6 மாதங்கள் வசூல் செய்ததுடன் பண்ணைக் குழு அமைக்க ஒவ்வொரு வருடமும் ரூ.500 வீதம் ரூ.1,090 வசூலித்துள்ளனர். இவ்வாறு 200-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் வசூல் செய்ததோடு அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கியுள்ளனர். இதே போன்று திருச்சுழி, காரியாபட்டி பகுதிகளிலும் பணம் வசூல் செய்துள்ளனர்.
ஆனால் பணம் வசூல் செய்த பெண்களுக்கு எவ்வித விவசாய இடு பொருட்களையும் வழங்காமல் வத்திராயிருப்பு பகுதியை விட்டு சென்று விட்டனர். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இதே போன்று மோசடி வசூலில் ஈடுபடுவதாக அறிகிறோம்.
எனவே மேற்படி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை இழந்த பெண்களுக்கு பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல போலீஸ் சூப்பிரண்டிடமும் மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story