கார்களின் கண்ணாடியை உடைத்து லேப்-டாப்புகள் திருடிய 3 பேர் கைது
அண்ணாநகர் பகுதியில் கார்களின் கண்ணாடியை உடைத்து லேப்-டாப்புகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு,
சென்னை அண்ணாநகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் கார்களின் கண்ணாடிகளை உடைத்து மர்மநபர்கள் காரில் இருக்கும் செல்போன், லேப்-டாப்புகளை திருடி வந்தனர். இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பலர் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் 1-வது மற்றும் 6-வது நிழற்சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மதன்குமார் (வயது 37) என்பவரை மர்மநபர்கள் வழி மறித்தனர். பின்னர் அவரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருடர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் திருச்சி மாவட்டம், மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த யாதவன் என்கிற ரவீந்திரன் (37), கரூர் மாவட்டம், குளித்தலை, சிவமயம் மெயின் ரோட்டை சேர்ந்த மகேஸ்வரன் (29), கடலூர் மாவட்டம், திட்டகுடி, வெண் கரும்பு கிராமத்தை சேர்ந்த, ராஜன் (41) என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து மதன்குமாரிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும், அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார்.
பிடிபட்ட 3 பேரும் வழிப்பறி மட்டுமல்லாமல் அண்ணாநகர் பகுதியில் கார் கண்ணாடிகளை உடைத்து லேப்-டாப்புகள், செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் விலை உயர்ந்த லேப்-டாப்புகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story