நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம், தேவாரத்தை அடுத்துள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் மத்திய அரசின் அணுசக்தி துறை சார்பில் ரூ.1,560 கோடி மதிப்பில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்கட்ட பணிகளாக அம்பரப்பர் மலையை சுற்றி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வேலி அமைக்கப்பட்டது. அங்கு 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தேக்கும் வகையில் ராட்சத தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இதனை அடுத்து ராசிங்காபுரத்தில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ள இடம் வரை சாலை அமைக்கும் பணியும், அம்பரப்பர் மலை அருகே கனரக வாகனங்கள் சென்று வர ரூ.4 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.
கடந்த 2015–ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ஐகோர்ட்டு மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இதனை அடுத்து நியூட்ரினோ ஆய்வு மையம் உள்ள பகுதியில் கட்டுமானப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மத்திய அணுசக்தி துறை சார்பில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் உத்தமபாளையம் தாலுகா பொட்டிப்புரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையம் திட்டத்தில் மாற்றம் இல்லை. மேலும் வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை என்று அறிவித்தனர். தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மீண்டும் பணிகள் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அப்பாஸ் (5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்):– நியூட்ரினோ திட்டத்திற்காக அம்பரப்பர் மலையை குடைந்து 2 கிலோ மீட்டர் நீளம் சுரங்கம் அமைக்கவும், இதற்காக பாறையை வெடிமருந்து பயன்படுத்தி தகர்க்கவும் திட்டமிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினர். ஏன் என்றால் அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் திட்டம் வருவதால், பூமிக்கு அடியில் குடையும் போது, அதிர்வுகளால் கல்லூரி இடியும் நிலை ஏற்படும். இதனால் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற கூறினர். சிறிதளவில் குடைவதற்கு இவ்வளவு பாதிப்பு என்றால், மலையில் சுரங்கம் அமைக்க பாறையை வெடி வைத்து தகர்க்கும் போது எந்த அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பாறையை வெடிவைத்து தகர்க்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் இந்த பகுதிகளில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடியும், நீர்நிலைகள் மாறுபடும். பாறையை குடைந்து எடுக்கும் போது அந்த பாறை தூசிகள் 100 கிலோமீட்டர் தூரம் வரை பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் பசுமையான கம்பம் பள்ளத்தாக்கு விவசாயம் இன்றி வறண்டு போகும். எனவே இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ராமராஜ் (18–ம் கால்வாய் விவசாய சங்க தலைவர்):– நியூட்ரினோ கதிர்களை ஆய்வு செய்ய பயன்படுத்தபடும் காந்த கருவியை குளிர்விக்க ஒவ்வொரு நாளும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த தண்ணீரை முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக குண்டலநாயக்கன்பட்டி முல்லைப்பெரியாற்று பகுதியில் உறைகிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு குழாய் பதித்துள்ளனர். இதனால் விவசாயப் பணிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கனவே மதுரைக்கு குடிநீர் குழாய் கொண்டு செல்ல பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூட்ரினோ திட்டத்துக்கும் அதிக அளவில் தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி தண்ணீர் இன்றி வறண்டு போகும் நிலை உருவாகி வருகிறது. இந்த திட்டத்தால் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் என்று பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி என்பது மக்களுக்காக தான் மக்களை அழிக்க பயன்படுத்த கூடாது.
பாபு(விவசாயி):– நாங்கள் அறிவியல் வளர்ச்சிக்கும், விஞ்ஞானத்திற்கும் எதிரானவர்கள் இல்லை. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் கடுமையாக எதிர்ப்போம். நியூட்ரினோ திட்டத்திற்காக தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, நச்சு தண்ணீரை நிலத்தில் விட உள்ளனர். இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். மேற்குதொடர்ச்சி மலையை ஐ.நா. பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது. இதனை சேதப்படுத்த கூடாது என்று கஸ்தூரி ரங்கன் அறிக்கை தெரிவித்துள்ளது. இப்படிபட்ட இடத்தை மாசுபடுத்தி கம்பம்பள்ளத்தாக்கை பாலைவனமாக மாற்றும் நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தால் தேனி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே இந்த பகுதியில் பருவமழை பொய்த்துப்போனதால் இருபோகம் நெல் விளைந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைநிலங்கள் காய்ந்து கிடக்கிறது. இந்த நிலையில் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டம் எங்களுக்கு தேவையில்லை.
சீனிவாசன் (கல்லூரி பேராசிரியர்):– நியூட்ரினோ திட்டத்தால் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் என்று சிலர் கூறி வருகின்றனர். அறிவியல் வளர்ச்சிக்கு என்றால் பொதுமக்களை பாதிக்காத வகையில் இடங்களை தேர்வு செய்து, அங்கு ஆய்வு பணிகளை தொடங்குங்கள். இந்த திட்டம் குறித்து பொதுமக்களின் சந்தேகத்திற்கு பதில் அளிக்கவேண்டும். உலக நாடுகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட சில வருடங்களில் மூடிவிட்டனர். ஆனால் விவசாயம் சார்ந்த பகுதியில் இத்திட்டத்தால், அதிக நன்மை கிடைத்தாலும், அது எங்கள் பகுதிக்கு வேண்டாம். இந்த திட்டம் குறித்து மத்திய, மாநில அரசு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
மணிகண்டன் (விவசாயி, டி.புதுக்கோட்டை):– எங்கள் கிராமத்தில் தான் இந்த மலை இருக்கிறது. முன்பு எல்லாம் இந்த மலையை கடந்து செல்லும் போது அங்கு இருக்கும் அம்பரப்பர் சாமி தான் நினைவில் வருவார். ஆனால், சில ஆண்டுகளாக நியூட்ரினோ திட்டம் குறித்த பயமே வருகிறது. இவ்வளவு பெரிய மலையை குடைந்து ஆய்வுக்கூடம் அமைக்கும்போது வெளிவரும் தூசியால் எங்கள் கிராமத்துக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. இது நல்ல திட்டம் என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் இதனால் ஆபத்து வரும் என்கிறார்கள். எங்கள் பகுதி மக்களின் வாழ்வாதாரமே மானாவாரி விவசாயமும், ஆடு, மாடுகள் மேய்த்தலும் தான். அதற்கும் இந்த திட்டத்தால் ஆபத்து வருமே என பயப்படுகிறோம்.
இளங்குமரன் (தமிழர் உரிமை மீட்புக்குழு தலைவர், தேனி):– இந்த திட்டம் மக்களின் நலனுக்கும், மண்ணின் வளத்துக்கும் எதிரானது. மேற்கு தொடர்ச்சி மலைகள் பாதுகாக்கப்பட வேண்டியது. ஆய்வுக்கூடம் அமைக்க, பாறையை குடையும்போதும், வெடி வைத்து தகர்க்கும் போதும் நில அதிர்வுகள் ஏற்படும். ஏற்கனவே இத்திட்டத்திற்காக கர்நாடகா, அசாம் போன்ற மாநிலங்களில் இடம் தேர்வு செய்தனர். ஆனால் அங்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் தேனி மாவட்டத்தில் இடம் தேர்வு செய்துள்ளனர். இந்த திட்டத்துக்கு எதிராய் போராட்டங்கள் வெடிக்கும். 2011–ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணையை காக்க மக்கள் தன்னெழுச்சியாய் போராடியது போல், மீண்டும் ஓர் தன்னெழுச்சிப் போராட்டம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அந்த பகுதியின் விவசாயம் மேம்பாட்டுக்கான, வன வளம் பெருக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story