நேரில் வரவழைக்கப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட்டார் அமராவதி மாநகராட்சி கமிஷனருக்கு சட்டசபையில் எச்சரிக்கை


நேரில் வரவழைக்கப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட்டார் அமராவதி மாநகராட்சி கமிஷனருக்கு சட்டசபையில் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 March 2018 4:22 AM IST (Updated: 28 March 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.வை அவமதித்ததாக அமராவதி மாநகராட்சி கமிஷனர் சந்திரகாந்த் குடேவார் சட்டசபைக்கு வரவழைக்கப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட்டார்.

மும்பை,

எம்.எல்.ஏ.வை அவமதித்ததாக அமராவதி மாநகராட்சி கமிஷனர் சந்திரகாந்த் குடேவார் சட்டசபைக்கு வரவழைக்கப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட்டார். அவருக்கு சட்டசபை எச்சரிக்கை விடுத்தது.

பயனாளிகள் பட்டியல்

அமராவதி மாநகராட்சி கமிஷனராக இருப்பவர் சந்திரகாந்த் குடேவார். இவர், பிரதான மந்திரி அவாஜ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியலை அறிவித்தார். இந்த பயனாளிகள் பட்டியலை உள்ளூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான சுனில் தேஷ்முக்கிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுனில் தேஷ்முக் எம்.எல்.ஏ. சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்தார்.

எச்சரிக்கை

இதையடுத்து அமராவதி மாநகராட்சி கமிஷனர் சந்திரகாந்த் குடேவார் சட்டசபையில் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் ஹரிபாவு பாக்டே சம்மன் அனுப்பினார். அதன்படி நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் சந்திரகாந்த் குடேவார் நேரில் ஆஜரானார். சட்டசபையின் வாயில் பகுதியில் இருந்த கூண்டில் அவர் நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சந்திரகாந்த் குடேவாருக்கு சட்டசபை சார்பில் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். அவரின் இந்த செயல் மக்கள் பிரதிநிதிகளை அவமதிப்பதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இனிமேல் இதுபோன்று நடக்க கூடாது என்றும் அவருக்கு சட்டசபையில் அறிவுறுத்தப்பட்டது.

Next Story