அம்பர்நாத் அருகே தண்டவாளத்தில் விரிசல் சென்னை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது பயணிகள் கடும் அவதி


அம்பர்நாத் அருகே தண்டவாளத்தில் விரிசல் சென்னை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது பயணிகள் கடும் அவதி
x

அம்பர்நாத் அருகே தண்டவாளத்தில் விரிசல் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது.

அம்பர்நாத்,

அம்பர்நாத் அருகே தண்டவாளத்தில் விரிசல் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது.

தண்டவாளத்தில் விரிசல்

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள அம்பர்நாத் - பத்லாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கல்யாண் தாண்டி அம்பர்நாத் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை எக்ஸ்பிரஸ்

இந்த நேரத்தில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த சென்னை எக்ஸ்பிரசும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சரி செய்யப்பட்டது.

இதையடுத்து மின்சார ரெயில் சேவை சீரானது. சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கியது. கோடை வெயிலின் கடுமையான வெப்பம் காரணமாகவே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story