டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் பாட்டாளி தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு,
தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சேகர், சுப்பிரமணி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சுதாகர் வரவேற்று பேசினார். பாட்டாளி தொழிற்சங்க பேரவை மாநில பொதுச்செயலாளர் ராமமுத்துகுமார் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை மேற்பார்வையாளர்களுக்கு ரூ.30 ஆயிரமும், விற்பனையாளர்களுக்கு ரூ.25 ஆயிரமும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரமும் மாத சம்பளம் கொடுக்க வேண்டும்.
* மதுவிலக்கை அமல்படுத்தும்போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று அரசுப்பணி வழங்க வேண்டும்.
* டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய மருத்துவ திட்டத்தை கைவிட்டு இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நடைமுறையில் உள்ள வாரவிடுமுறை வழங்கும் திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் அமல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பா.ம.க. துணை பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், வேலுச்சாமி, பேரவையின் மாநில துணைச்செயலாளர் ராமசுந்தரன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் பரமசிவம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், மாவட்ட செயலாளர்கள் கோபால், கிருபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story