லோக்பால், லோக்அயுக்தா; அரசுகள் நடுங்குவது ஏன்?
‘காங்கிரஸ் இல்லாத பாரதம் காண்போம்’ என்று பா.ஜனதாவும், ‘மோடி இல்லா தேசம் வேண்டும்’ என்று காங்கிரசும் சமீப காலமாக முழங்கி கொண்டு இருக்கின்றன.

இதில் எது நடந்தாலும், நடக்காவிட்டாலும் சாமானிய மனிதர்களுக்கு பெரும் கவலை இல்லை. ஆனால் ஊழல் இல்லா தேசமும், மாநிலங்களும் தான் நமக்கு தேவை.
ஊழலை அறவே ஒழிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் ‘முடியாது’ என்பதாக இருக்கலாம். அதற்காக ஊழலை அப்படியே கண்டும் காணாமலும் விட்டு விட முடியாது. புற்றுநோய் பாதித்தால் அவசரமாக மருத்துவமனைக்கு சென்று முடிந்த வரை போராடுவதை போல, ஊழலை ஒழிக்கவும் தீவிரம் காட்ட வேண்டும். அதன் மூலம் ஊழலை அறவே ஒழிக்க முடியாவிட்டாலும், வெகுவாக குறைத்து ஆரோக்கியமான இந்தியாவை நிர்மாணிக்க முடியும்.
லஞ்சம், ஊழலை தடுக்க தேசிய அளவில் சி.பி.ஐ. போலீசார் உள்ளனர். மாநிலங்கள் தோறும் ஏதாவது ஒரு ஊழல் தடுப்பு அமைப்புகள் இருக்க தான் செய்கின்றன. ஆனால் ஊழலை வெகுவாக குறைக்க முடியவில்லை. அது பெருகி கொண்டு தான் இருக்கிறது. இதற்காக தான் ‘லோக்பால்’ என்னும் வலுவான ஊழல் தடுப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று 1960-களில் இருந்தே பலமுறை நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுக்கெல்லாம் தோல்வியே கிடைத்தது.
இந்த நிலையில் சில மாநிலங்கள் தாங்களாகவே ‘லோக்அயுக்தா’ என்ற ஊழல் தடுப்பு அமைப்பை உருவாக்கி கொண்டன. ஆனால் நாடு முழுமைக்கும் லோக்பால் அமைப்பும், அனைத்து மாநிலங்களிலும் ‘லோக்அயுக்தா’ அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அது பல் இல்லா பாம்பை போல் இல்லாமல் வலுவானதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரே முன்வைத்தார்.
இதற்காக 2011-ம் ஆண்டு டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் பெரும் திரளாக கூடி ஆதரவு அளித்தனர். இந்த கிளர்ச்சியை கண்டு ஆட்சியாளர்கள் நடுங்கிப்போனார்கள்.
இதன் எதிரொலியாக, கடுமையான விவாதத்துக்கு பிறகு லோக்பால் மற்றும் லோக்அயுக்தா மசோதா நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவை ஜனாதிபதி கையெழுத்திட்டு சட்டமாக்கினார். 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
ஆனால் இந்த ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இதுநாள் வரை மத்திய அரசும், பல மாநிலங்களும் லோக்பால், லோக் அயுக்தா அமைப்புகளை உருவாக்கவில்லை என்பது தான் வேதனை. இந்த அமைப்புகளை உருவாக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே மீண்டும் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்.
லோக்அயுக்தா அமைப்பை உருவாக்காத தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, திரிபுரா, அருணாசல பிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், காஷ்மீர் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் எச்சரிக்கை மணியை அடித்தது.
லோக்பால் என்பது மத்திய அரசு பணியாளர்கள் லஞ்சம், ஊழலில் ஈடுபடும்போது, அதனை தடுக்கும் வகையில் விசாரணை நடத்தும் ஒரு அமைப்பாக திகழும். லோக்அயுக்தா என்பது மாநில அரசு பணியாளர்கள் மீது விசாரணை நடத்தும் ஒரு அமைப்பாக விளங்கும். இந்த அமைப்புகளின் விசாரணை வளையத்துக்குள் மக்கள் பிரதிநிதிகளும் கொண்டு வரப்பட்டு இருப்பது தான் முக்கியத்துவம் வாய்ந்தது.
லோக்பால் அமைப்புக்கு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைவராக இருப்பார். இதேபோல மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்புக்கு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அல்லது அதற்கு இணையானவர்கள் தலைவராக இருப்பார்கள். அந்த நீதிபதிகளுக்கு கீழ் லோக்பால் மற்றும் லோக்அயுக்தா போலீஸ் படை பணியாற்றும். உயர் அதிகாரத்தில் நீதிபதி ஒருவரை பணி அமர்த்துவது தான் அரசுகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஏற்படும் விளைவு என்ன? என்பதற்கு முன்உதாரணங்கள் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் லோக்அயுக்தா அமைப்பு வலுவானதாக இருந்தது. தற்போது அன்னா ஹசாரேயுடன் இணைந்து போராடி வரும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அந்த மாநிலத்தில் லோக்அயுக்தா அமைப்பின் தலைவராக இருந்தார்.
அந்த காலகட்டத்தில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா ஊழல் புகாரில் சிக்கி லோக்அயுக்தா விசாரணை வளையத்தில் அகப்பட்டு கொண்டார். இதனால் முதல்-மந்திரி பதவியை அவர் இழக்க நேர்ந்தது. அடுத்த நாட்களில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை செல்லவும் நேர்ந்தது.
அதே கர்நாடக மாநிலத்தில் கோலார் தங்கவயல் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த சம்பங்கி ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லோக்அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற சூழல் ஏற்பட்டு தனக்கு தானே சூடு போட்டு கொள்ள எந்த அரசியல்வாதி தான் விரும்புவார். இதனால் தான் லோக்பால், லோக்அயுக்தா அமைப்புகளை அமைக்க அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஏற்கனவே லோக்அயுக்தா இருக்கும் மாநிலங்களில் அந்த அமைப்புகளை வலுவிழக்க செய்யும் பணிகளையும் அரசுகள் செவ்வனே செய்கின்றன.
நாட்டை திரும்பி பார்க்க வைத்த கர்நாடக மாநில லோக்அயுக்தாவை வலிமை இழக்க செய்ய அங்கு புதிதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையை அந்த மாநில அரசு உருவாக்கி விட்டது.
மராட்டிய மாநிலத்தில் 1971-ம் ஆண்டே நாட்டில் முதன் முறையாக லோக்அயுக்தா அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த மாநிலத்தில் லோக்அயுக்தா அமைப்பு தடம் தெரியாமலேயே தனது பணியை செய்து கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே இருக்கும் ஊழல் தடுப்பு அமைப்புகளை காலில் போட்டு மிதிக்கும் செயலில் ஈடுபடும் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் வலுவான லோக்பால், லோக்அயுக்தா அமைப்புகளை உருவாக்க எப்படி முன்வருவார்கள்?
-மயிலை அமிர்த செல்வி

Related Tags :
Next Story