சங்கரன்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் கிறிஸ்தவ சபைகள் - போதகர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நடந்தது
நெல்லை மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் அனைத்து கிறிஸ்தவர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்,
மதுரையில் கிறிஸ்தவ சபைகள் மற்றும் போதகர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து நேற்று சங்கரன்கோவிலில் நெல்லை மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் அனைத்து கிறிஸ்தவர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு நெல்லை மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் மாவட்ட அனைத்து கிறிஸ்தவர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மதுரையில் கிறிஸ்தவ சபைகள், போதகர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வன்கொடுமைகளையும், பைபிளை தீயிட்டு எரித்த சம்பவங்களையும் கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.நெல்லை மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் பழனி தலைமை தாங்கினார். பாதிரியார்கள் ஞானபிரகாசம், சுவாமிநாதன், மோசஸ் ராஜதேவன் மற்றும் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதிரியார் தனராஜ், முத்துக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பீர்மைதீன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முகமது அயூப், மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் செய்யது இப்ராஹிம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துப்பாண்டியன், அசோக்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுமுகம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். உண்ணாவிரதத்தில் முன்னாள் நகரசபை உறுப்பினர் அண்ணாவியப்பன், மக்கள் தமிழ் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் தம்பி சேவியர், தமுமுக நகர செயலாளர் இஸ்மாயில் மைதீன், நிர்மல் சிங் உள்ளிட்ட சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
திடீர் சாலை மறியல்
உண்ணாவிரத போராட்டத்தின் போது, அருகில் பள்ளி இருப்பதால் மைக்செட் சத்தத்தை குறைக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்த உண்ணாவிரத போராட்ட குழுவினர் அந்த பகுதியில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், அனைவரும் மாலை வரை உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story