வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது


வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
x
தினத்தந்தி 29 March 2018 3:45 AM IST (Updated: 29 March 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது. இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மகன் விஜயகுமார் (வயது 32). அதேபகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (27). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் குடித்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story