மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னார்குடி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 24-வது மாநாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னதாக கட்சியின் 24-வது மாநில மாநாட்டை முன்னிட்டு கோவையில் இருந்து தியாகிகளின் நினைவாக கொண்டு வரப்பட்ட கட்சி கொடியினை தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு ஏற்றினார்.
தியாகிகளின் நினைவாக திருத்துறைப்பூண்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவு சுடரை கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் பெற்று கொண்டார். மாநாட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக முன்னாள் எம்.பி. செல்வராசு வரவேற்றார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா செயலாளர் ரெங்கசாமி, தேசிய செயலாளர்கள் டி.ராஜா எம்.பி., கே.நாராயணா, மாநில செயலாளர் முத்தரசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச்செயலாளர் கே.சுப்பராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஊழலை ஒழிக்க பொருத்தமான சட்டப்பிரிவுகளை கொண்ட லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை குழுவை அமைக்க முயற்சிக்கிறது. இதை நிராகரித்து தமிழகத்தின் உரிமையை மீட்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.
மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தொழிலாளர்களை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் பணி நியமனம் செய்து கொள்ளும் வகையில் நிலையாணை சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு தொழிலாளியை ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டுக்கு என நியமனம் செய்து, அந்தக்காலம் முடிந்ததும் தானாகவே வேலை இழக்க செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை திருத்துவதற்கு, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, அது நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் இந்த திருத்தம் நிர்வாக உத்தரவின் மூலம் அமலாக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர் விரோத திருத்தம் ஆகும். இனி நிரந்தர தொழிலாளர் என யாரும் இருக்க முடியாத நிலையை இத்திருத்தம் உருவாக்குகிறது. எனவே நிலையாணை சட்ட திருத்தத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டன. முடிவில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story