போக்குவரத்து கழக ஆய்வாளரை வேன் ஏற்றி கொல்ல முயற்சி டிரைவர் கைது


போக்குவரத்து கழக ஆய்வாளரை வேன் ஏற்றி கொல்ல முயற்சி டிரைவர் கைது
x
தினத்தந்தி 29 March 2018 3:45 AM IST (Updated: 29 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே போக்குவரத்து கழக ஆய்வாளரை வேன் ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவட்டார்,

திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுனர் பயிற்சி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்லத்துரை.

இவர் திருவட்டார் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்வதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் வேர்கிளம்பி பகுதியில் செல்லதுரை தலைமையில் ஊழியர்கள் வாகன சோதனை செய்தனர்.

உயிர் தப்பினார்

அப்போது, அந்த வழியாக வேகமாக ஒரு வேன் வந்தது. அதை வேனை நிறுத்தும்படி அவர்கள் கை காட்டினார்கள். ஆனால் டிரைவர், வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிவந்து செல்லத்துரை மீது மோதுவதுபோல் வந்து நிறுத்தினார். செல்லத்துரை உஷாராகி விலகியதால் உயிர் தப்பினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே டிரைவர், ஆய்வாளர் செல்லத்துரைக்கு கொலைமிரட்டல் விடுத்துவிட்டு வேனை வேகமாக ஓட்டி சென்று விட்டார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவட்டார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் விரைந்து சென்று செம்பருத்திவிளை பகுதியில் அந்த வேனை மடக்கினார்.

கைது

பின்னர் வேன் டிரைவர் திருவட்டார் புனையன்விளை கல்லங்குழியை சேர்ந்த சுஜினிடம்(வயது 29) விசாரித்தபோது அவர் மது குடித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், போக்குவரத்து கழக ஆய்வாளர் மீது வேன் ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story