சசிகலாபுஷ்பா கணவர் ராமசாமி முன்ஜாமீன் கேட்டு மனு: மதுரை கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
சசிகலாபுஷ்பா கணவர் ராமசாமி முன்ஜாமீன் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு அளித்திருந்தார், இதன் விசாரணையை மதுரை கோர்ட் ஒத்திவைத்தது.
மதுரை,
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி. விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, அவர் சட்ட ஆலோசகர் ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கிடையில் ராமசாமி வரதட்சணை கொடுமை செய்வதாக அவரது மனைவி சத்தியபிரியா திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்பேரில் ராமசாமி, அவரது சகோதரிகள் செல்வி, பாரதி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் தனது கணவர் தன்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை குடும்பநல கோர்ட்டில் சத்தியபிரியா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ராமசாமி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்ய தடைவிதித்து கடந்த வாரம் உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறி சசிகலாபுஷ்பாவும், ராமசாமியும் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தன் மீது திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் பதிவு செய்துள்ள வரதட்சணை வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ராமசாமி மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story