காவிரி மேலாண்மை வாரியம்: கர்நாடக தேர்தலை கருதி மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
சிவகாசி,
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினையில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதை மனதில் வைத்துக்கொண்டு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று நினைத்துக்கூட மத்திய அரசு காலதாமதப்படுத்தலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை அ.தி.மு.க. எம்.பி.க்களின் போராட்டம் தொடரும். மத்திய அரசிற்கு அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டுதான் வருகின்றது. தொடர்ந்து போராடுவோம்.
காவிரி பிரச்சினைக்காக பாராளுமன்றத்தை முடக்குவது பா.ஜனதா ஆட்சியை காப்பாற்றத்தான் என்று ஒரு கற்பனை கதை சொல்கின்றனர். ஒன்றும் பேசவில்லை என்று கூறினால் பா.ஜனதாவுக்கு அடிமை ஆட்சி என்று விமர்சனம் செய்கின்றனர். அ.தி.மு.க. என்ன செய்தாலும் குற்றம் சொல்வதற்கே ஒரு கூட்டம் செயல்பட்டு வருகின்றது. தமிழக பிரச்சினைக்கு ஆந்திர எம்.பி.க்கள் என்றைக்கும் குரல் கொடுத்தது கிடையாது. அப்படி இருக்கையில் ஆந்திர பிரச்சினைக்காக அவர்களுக்கான ஆதரவான நிலையை அ.தி.மு.க. அரசு எடுக்காது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அ.தி.மு.க. அரசு செயல்படாது. இன்னும் ஒருநாள் உள்ள நிலையில் ஒருமணி நேரத்திற்குள்ளே கூட அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தி.மு.க., காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகின்றன. மத்தியில் 14 வருடம் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்தபோது ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு பேச்சு என்ற வகையில் தி.மு.க. அரசியல் செய்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை இன்றைக்குள்ள பிரச்சினை கிடையாது. மக்கள் நலன் கருதி முதல்-அமைச்சர் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகின்றார். போராட்டத்தின் பின்னணியில் தி.மு.க.தான் செயல்படுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story