ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க கோரி காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க கோரி காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2018 4:15 AM IST (Updated: 29 March 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று தர்மபுரியில் உள்ள ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று தர்மபுரியில் உள்ள ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் இருந்து 1 மணிநேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு ஊழியர் சங்க கிளைத்தலைவர் வேடியப்பன் தலைமை தாங்கினார். சங்க கோட்ட இணை செயலாளர் மாதேஸ்வரன், அதிகாரிகள் சங்க தலைவர்கள், குமார், மகேஷ்குமார், வளர்ச்சி அதிகாரிகள் சங்க தலைவர் குமரேசன், நிர்வாகிகள் மகேந்திரன், சரவணகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். 1995-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் இணைய இறுதி வாய்ப்பு வழங்கவேண்டும். வாரத்திற்கு 5 நாள் வேலைதிட்டத்தை அமல்படுத்த வேண்டும். 3 மற்றும் 4 நிலை ஊழியர்களை தேவையான அளவில் பணிநியமனம் செய்யவேண்டும். காப்பீட்டு நிறுவன முதல்நிலை அதிகாரிகளின் பதவி உயர்வில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தை திரும்ப பெறவேண்டும். வளர்ச்சி அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

Next Story