பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்க முடியாத விரக்தியால் வக்கீல் தீக்குளிக்க முயற்சி
பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்க முடியாத விரக்தியால் சேலம் வக்கீல் தீக் குளிக்க முயற்சித்தார்.
சேலம்,
தமிழகம் முழுவதும் பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, சேலம் அஸ்தம்பட்டி கோர்ட்டு வளாகத்தில் பார் கவுன்சிலில் பதிவு பெற்ற வக்கீல்கள் வாக்களிக்க வசதியாக பெட்டி வைக்கப்பட்டிருந்தது. சேலம் மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், வக்கீலுமான ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட நேற்று வக்கீல்கள் பலர் வாக்குகளை பதிவு செய்தனர்.
சேலம் டவுன் சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் முகமது யாகூப்(வயது33). பி.எல். படித்துள்ள இவர், கடந்த 2015-ம் ஆண்டு முதல் சேலம் கோர்ட்டில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். நேற்று நடந்த பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முகமது யாகூப் பெயர் இடம்பெற வில்லை. இதனால், விரக்தியில் இருந்து வந்தார்.
திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக கூறிய முகமது யாகூப் நேற்று பகலில் மண்எண்ணெய் பாட்டிலுடன் சேலம் அஸ்தம்பட்டி கோர்ட்டு வளாகத்திற்கு வந்தார். அங்கு கோர்ட்டுக்கு வாகனங்கள் நுழையும் பகுதியில் நின்று கொண்டு பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதைப்பார்த்த போலீசார் மற்றும் சக வக்கீல்கள் அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
அப்போது முகமது யாகூப் கூறுகையில்,“கடந்த 2010-ம் ஆண்டு சேலம் சட்டக்கல்லூரியில் பி.எல். படித்து முடித்தேன். தகுதித்தேர்வு மற்றும் அகில இந்திய தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பில் பதிவு செய்துள்ளேன். அதுபோல சேலம் கோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்தேன். ஆனால், பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. இதனால், வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து கேட்டால் முறையான பதில் இல்லை. எனவேதான், தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட முடிவெடுத்தேன்” என்றார். பின்னர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள நீதிதேவதை சிலை முன்பு தரையில் அமர்ந்து அவர் சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஓமலூர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க அறையில் நேற்று நடந்தது. தேர்தலுக்கு சார்பு நீதிபதி தயாநிதி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ரமேஷ் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாகவும், துணை தேர்தல் அதிகாரிகளாக வக்கீல்கள் துரைராஜ், சிவராம் ஆகியோரும் இருந்து தேர்தலை நடத்தினர்.
ஓமலூர் பகுதியில் உள்ள 91 வக்கீல்கள் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்தனர்.

Related Tags :
Next Story