பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உலக அமைதிக்காக 11,111 பெண்கள் பங்கேற்கும் சிறப்பு விளக்கு பூஜை
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் அடுத்த மாதம் 29-ந் தேதி உலக அமைதிக்காக 11,111 பெண்கள் பங்கேற்கும் சிறப்பு விளக்குபூஜை நடைபெற உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் அடுத்த மாதம் 29-ந் தேதி உலக அமைதிக்காக 11,111 பெண்கள் பங்கேற்கும் சிறப்பு விளக்குபூஜை நடைபெற உள்ளது. இது கின்னஸ் சாதனை முயற்சியாகவும் நடக்கிறது.
11,111 விளக்கு பூஜை
பெங்களூருவில் உள்ள ஸ்ரீஆதிசிவசக்தி சித்தர் ஞான பீடம் சார்பில் அரண்மனை மைதானம் திரிபுர வாசினியில்(நுழைவுவாயில்-2) அடுத்த மாதம்(ஏப்ரல்) 29-ந் தேதி 11,111 பெண்கள் கலந்துகொள்ளும் சிறப்பு விளக்கு பூஜை நடைபெற உள்ளது. உலக அமைதிக்காக நடைபெறும் விளக்கு பூஜையானது தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை ஸ்ரீசிவசக்தி சித்தர் ஞான பீடத்தின் ருத்ர சித்தர் சாமியின் தலைமையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு ஸ்ரீஆதிசிவசக்தி சித்தர் ஞானப்பீட தலைவி கோதைநாயகி, பொதுச்செயலாளர் சுந்தர்வேலு ஆகியோர் நேற்று நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வெளியிட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலக அமைதி
சித்திரை பவுர்ணமி தினத்தில் சித்தரகுப்தர் பிறந்தார். இந்நாளில், மனிதர்கள் செய்த தவறுகளை அவர் திருத்தி எழுதுவார் என்பது ஐதீகம். இந்த நாளையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதி பெண்களுக்கான தனலட்சுமி சிறப்பு விளக்கு பூஜை நடைபெற உள்ளது. உலக அமைதி, மழை வேண்டியும், இல்லத்தில் அன்பும்-செல்வமும் வளரவும், பெண்களுக்கான மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றவும், கர்நாடகத்தின் நலன் காக்கவும் இந்த பூஜை நடத்தப்பட உள்ளது.
பெங்களூருவில் 108 விளக்கு பூஜையுடன் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் தஞ்சாவூர் மாவட்டம் கார்காவயல் கிராமத்தில் 10,008 விளக்கு பூஜை நடந்தது. இது மக்களுக்கு நல்ல பலனை அளித்தது. இதேபோல், கர்நாடக மக்களின் நலனுக்காக ருத்ர சித்தர் சாமியின் ஆசியுடன் 11,111 பெண்களால் சிறப்பு விளக்கு பூஜை நடைபெற உள்ளது.
சாதி, மத பாகுபாடின்றி...
விளக்கு பூஜையில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் சாதி, மத பாகுபாடின்றி கலந்துகொள்ளலாம். விளக்கு பூஜையில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களின் பெயர்களை அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். ஒரே பகுதியில் வசிக்கும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பினால் நாங்களே அந்த பகுதிக்கு சென்று பெயர்களை பதிவு செய்து கொள்வோம்.
29-ந் தேதி காலை மஹாகணபதி யாகம், சுதர்சன வேள்வி ஆகியவை நடைபெறும். அன்று மதியம் 2 மணிக்கு விளக்கு பூஜை தொடங்கி இரவு 7 மணிக்கு முடிவடையும். விளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு குத்து விளக்கு, சேலை மற்றும் 10-க்கும் அதிகமான பூஜை பொருட்கள் வழங்கப்படும். இந்த விளக்கு பூஜை கின்னஸ் சாதனை முயற்சியாகவும் நடைபெறுகிறது. எனவே, கின்னஸ் சாதனை படைக்கும் பட்சத்தில் விளக்கு பூஜையில் கலந்துகொள்பவர்களுக்கு கின்னஸ் சாதனை சான்றி தழும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பெங்களூரு ஸ்ரீஆதிசிவசக்தி சித்தர் ஞான பீட பொருளாளர் சஞ்சய் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story