போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்
பெங்களூருவில் கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி, போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார்.
பெங்களூரு,
பெங்களூருவில் கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி, போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
தலைமறைவு
பெங்களூரு காட்டன் பேட்டை அருகே வசித்து வருபவர் நிர்மல் என்ற ரூபேஷ். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 3 வழக்குகள் காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் உள்ளது. ரவுடி ஜீவா என்ற ஜீவானந்தாவை கொலை செய்த வழக்கில் போலீசாரிடம் சிக்காமல் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக நிர்மல் தலைமறைவாக இருந்தார். மேலும் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தும் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நிர்மல் போலீசாரிடம் சிக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் எதிர் கோஷ்டியை சேர்ந்த ரவுடியான அதுசை கொலை செய்ய திட்டமிட்டு சாம்ராஜ்பேட்டை அருகே ரவுடி நிர்மல் தனது கூட்டாளிகளுடன் காத்து நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரவுடி நிர்மலை கைது செய்ய காட்டன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரசாமி, சாம்ராஜ்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள்.
ரவுடியை சுட்டுப்பிடித்தனர்
இந்த நிலையில், சாம்ராஜ்பேட்டையில் உள்ள லிங்காயத் சமுதாய பவன் அருகே நின்ற ரவுடி நிர்மலை போலீசார் சுற்றி வளைத்தார்கள். பின்னர் அவரை போலீஸ்காரர்கள் அப்துல் ரகுமான் மற்றும் குமார் பிடிக்க முயன்றனர். அப்போது திடீரென்று தன்னிடம் இருந்த கத்தியால் போலீஸ்காரர்களை நிர்மல் தாக்கினார். இதில், 2 போலீஸ்காரர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ரவுடி நிர்மலை சரண் அடைந்து விடும்படி கூறி இன்ஸ்பெக்டர் பிரசாந்த் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தார். ஆனாலும் அவர் சரண் அடைய மறுத்துவிட்டார். மேலும் அங்கிருந்து போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார்.
இதையடுத்து, காட்டன்பேட்டை இன்ஸ்பெக்டர் குமாரசாமி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் நிர்மலை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில், ஒரு குண்டு அவரது இடது காலில் துளைத்ததால், அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனே நிர்மலை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் ரவுடி நிர்மல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல நிர்மல் தாக்கியதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர்கள் அப்துல் ரகுமான், குமார் ஆகியோரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story