கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த கோரி போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த கோரி போராட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தொடக்க கூட்டுறவு சங்கங்கங்களில் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 26-ந்தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் வேட்பு மனுக்கள் பரிசீலனையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடு நடந்ததாகவும், கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த கோரிஅரசியல் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்தூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இயக்குனர்கள் பதவிக்கு 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 11 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், மற்றவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பால் உற்பத்தியாளர்கள், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களின் பெயர்கள் மட்டும் ஒட்டப்பட்டுள்ளதாக கூறி, பாலை கீழே ஊற்றி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலுக்காக 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 7 பேரது மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் நேற்று காலை மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் பால் கேன்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை கலைத்தனர்.
சின்னசேலத்தில் உள்ள பேரூராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 7 பேரது மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு பலகையில் பெயர் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மற்றவர்கள், அந்த அலுவலகத்துக்கு பூட்டு போட்டு பூட்டி, அங்கிருந்து சென்றனர்.
மேல்மலையனூரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் பதவிக்கு 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 7 பேரின் மனுக்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் ஆசிரியர்கள் சங்கத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நியமித்த 7 பேரை வேட்பாளர்களாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
கண்டமங்கலம் அருகே மிட்டா மண்டகப்பட்டு தொடக்க கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 21 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் தலைமையில் மிட்டாமண்டகப்பட்டு கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த கோரிபோராட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story