ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை 2 பேர் பிடிபட்டனர்


ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை 2 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 29 March 2018 3:45 AM IST (Updated: 29 March 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடுபவர் களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 2 பேரை கைது செய்து உள்ளனர்.

மும்பை,

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடுபவர் களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 2 பேரை கைது செய்து உள்ளனர்.

செல்போன் திருட்டு


மும்பையில் மின்சார ரெயில்களில் காணப்படும் கூட்ட நெரிசலை பயன் படுத்தி திருட்டு ஆசாமிகள் பயணிகளின் செல்போன் உள்ளிட்ட உடைமைகளை திருடும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. குறிப்பாக தினசரி பயணி களிடம் இருந்து 100 செல்போன் திருட்டு போவதாக கூறப்படுகிறது.

இதுதவிர அவ்வப்போது தண்டவாளங்களின் அருகில் நின்றபடி ரெயில் பயணிகளை தாக்கி செல்போன்களை பறிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

தனிப்படை

இதை தடுக்க ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இணைந்து தனிப்படையை அமைத்து உள்ளனர். மும்பையில் உள்ள 24 ரெயில்வே போலீஸ் நிலையங்களிலும் தலா 2 உதவி இன்ஸ்பெக்டர், 4 போலீசார் என 6 பேர் பணியில் இருப்பார்கள்.

அவர்கள் பயணிகளிடம் செல்போன் திருட்டு அதிகம் நடைபெறும் தாதர் குர்லா, தாதர் - பாந்திரா ரெயில் நிலையங்களிடையே சாதாரண உடையில் சென்று கண்காணிப்பார்கள் என ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பயணிகளிடம் செல்போன் திருடியதாக தனிப்படை போலீசார் பாபு சேக் (வயது22), சாபாஷ் சிராஸ் சேக் (20) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.61 ஆயிரத்து 740 மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Next Story