தாராபுரத்தில் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் குளறுபடியால் சாலை மறியல்
தாராபுரத்தில் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் நடந்த குளறுபடியால் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் இதற்கான வேட்பு மனு தாக்கல்கள் நடைபெற்று வருகிறது. தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலுக்காக நேற்று புதுக்காவல் நிலைய வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. மொத்தம் 41 வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 26 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாலை 6 மணியாகியும் வேட்புமனு இறுதி பட்டியலை அதிகாரிகள் வெளியிடாததால், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள மீனவர்கள் ஒன்று திரண்டு, துர்க்கை அம்மன் கோவிலுக்கு முன்பு கூடினார்கள். தேர்தல் அதிகாரிகள் முறையான தகவல்களை தெரிவிக்காத காரணத்தால், கூட்டுறவு சங்கத் தேர்தலில் குளறுபடிகள் நடப்பதாக தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கூறியதாவது:- கடந்த முறை இந்த கூட்டுறவு சங்க தேர்தலின் போது, அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்கு பயந்து, ஒருவரை தலைவராக நியமனம் செய்தனர். அப்போது நாங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் எங்களின் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் அந்த நபரையே தலைவராக நியமித்தார்கள். அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக சங்கத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. மீனவர்களுக்கு எந்தவித அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற்றுத்தரவில்லை. கூட்டுறவு சங்கத்தின் மூலமாக எந்த மீனவரும் பயனடையவில்லை. எனவே தான் இந்த முறை மீனவர் நலனில் அக்கறை கொண்ட, நன்றாக செயல்படக்கூடிய ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். ஆனால் அதிகாரிகள் ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு பயந்து, அவர்கள் சொல்லும் நபரை தலைவராக நியமனம் செய்ய முயற்சிசெய்கிறார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. முறையாக வேட்பாளர் இறுதிபட்டியலை அறிவித்து, தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கைவைத்தோம்.
தேர்தல் மூலம் எங்களுக்கு யார் தலைவராக வரவேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம் என்று கூறினோம். ஆனால் எங்களுடைய கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று கூறினார்கள்.
மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் புதுக்காவல் நிலைய வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, முறைபடி தேர்தல் நடத்துவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story