ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த பெண் விமானி சிகிச்சை பலனின்றி சாவு
பெண் விமானி பென்னி சவுத்ரியின் ஹெல்மெட்டில் ஹெலிகாப்டரின் ரோடார் பிளேடு வேகமாக வந்து மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
மும்பை,
ராய்காட் மாவட்டத்தில் நாதகிராம் கடற்கரையில் கடந்த 10-ந் தேதி கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் பெண் விமானி பென்னி சவுத்ரி உள்பட 4 பேர் இருந்தனர்.
வானில் பறந்து கொண்டி ருந்த போது, திடீரென ஹெலிகாப்டர் என்ஜின் நின்றது. இதையடுத்து ஹெலி காப்டர் கடலில் விழுந்து விடாமல் இருப்பதற்காக கடற்கரை மணலில் இறக்க முயற்சி செய்யப்பட்டது.
ஆனால் அதற்குள் ஹெலிகாப்டர் கடற்கரையில் உள்ள பாறையில் இறங்கியது. இந்த நிலையில் வெளியேற முயன்றபோது பெண் விமானி பென்னி சவுத்ரியின் ஹெல்மெட்டில் ஹெலிகாப்டரின் ரோடார் பிளேடு வேகமாக வந்து மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மும்பை கொலபாவில் உள்ள கடற்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையில் ஏற்பட்ட காயத்துக்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இருப்பினும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், 17 நாட்களுக்கு பிறகு நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Tags :
Next Story