குழந்தை சுதந்திரம்


குழந்தை சுதந்திரம்
x
தினத்தந்தி 29 March 2018 11:00 AM IST (Updated: 29 March 2018 10:25 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம் என்பார்கள். ஆனால் நாம் இன்றைய குழந்தைகளை சரியான முறையில் வளர்க்கிறோமா? என்றால் சந்தேகம்தான்.

சிறு வயதில் இருந்தே குழந்தைகளின் மீது பெற்றோர் தங்களின் ஆசைகளையும், கனவுகளையும் திணிக்கின்றனர். குழந்தைகளின் எண்ணம் என்னவென்று அவர்கள் கவலைப்படுவதில்லை. இதனால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மன ரீதியாக, உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இத்தகைய பாதிப்புகளே குழந்தைகளை தற்கொலைக்கு தூண்ட வாய்ப்பாக அமையும். மன அதிர்ச்சி ஏற்படுத்தும் செயல்கள், தோல்விகள், திட்டுதல், ஒப்பிட்டு பேசுதல் போன்ற சிறு செயல்கள் குழந்தைகளிடையே ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அவர்களின் திறமைக்கு மீறிய எதிர்பார்ப்பை வைப்பதில் நியாயமில்லை. குழந்தைகள் முன்பு தீய வார்த்தைகளை உபயோகித்தல், சண்டை போட்டுக் கொள்ளுதல், அடித்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது குழந்தைகள் ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளிடம் தங்களது குடும்பநிலை வறுமையை பேசும்போது பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது குறையும்போது குழந்தைகள் அன்புக்கு ஏங்கு கின்றார்கள். மேலும், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். சுய மதிப்பு குறையும். தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். சிந்திக்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க பெற்றோர்கள் குழந்தைகளிடம் தோழமை உணர்வுடன் பழகவேண்டும். குழந்தைகள் தோல்வி அடையும்போது அவர்களை திட்டாமல், ஊக்கப்படுத்த வேண்டும். பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசாமல் அவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதனை வளர்த்து கொள்ள பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

கல்வி ஒன்றே வாழ்க்கையாகாது என்பதை பெற்றோர்கள் தங்கள் மனதில் பதியவைக்க வேண்டும். நேற்றைய கரு இன்றைய குழந்தை; நாளைய சமுதாயம் என்பதை மறந்துவிடக்கூடாது.

-ஸ்ரீ விவேக், ஈரோடு

Next Story