தரை இறங்கிய நிலா


தரை இறங்கிய நிலா
x
தினத்தந்தி 30 March 2018 9:15 AM IST (Updated: 29 March 2018 4:06 PM IST)
t-max-icont-min-icon

வேலன்டீன் டியூலக் என்பவர் சாகச பிரியர். பாராசூட்டில் பறப்பது, உலகை வலம் வருவது போன்றவை வேலன்டீனுக்கு பிடித்த வி‌ஷயம்.

வேலன்டீன் பலமுறை பாராசூட்டிலிருந்து குதித்து, பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அத்தகைய சாதனைகளுக்கு எல்லாம் உச்சமாக, சமீபத்தில் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அது என்ன தெரியுமா...?

ஒளிர்வூட்டப்பட்ட பாராசூட்டில் பறந்து, பனிப்பிரதேசங்களை இரவில் சுற்றிப்பார்த்ததுதான். அதோடு இரவில் பாராசூட்டில் பறந்தவர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.

இவர் மலை உச்சியில் இருந்து பாராசூட்டில் பறந்து வந்த காட்சிகளை பலரும் ஆச்சரியமாக பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஏனெனில் இவரது பாராசூட் பயணம், நிலா தரை இறங்கியதை போன்று காட்சியளித்ததாம்.

Next Story