கூடங்குளம் பகுதி மக்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன அணுமின் நிலைய வளாக இயக்குனர் சவுத்ரி தகவல்


கூடங்குளம் பகுதி மக்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன அணுமின் நிலைய வளாக இயக்குனர் சவுத்ரி தகவல்
x
தினத்தந்தி 30 March 2018 2:00 AM IST (Updated: 30 March 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் பகுதி மக்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன என்று அணுமின் நிலைய வளாக இயக்குனர் சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

வள்ளியூர்,

கூடங்குளம் பகுதி மக்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன என்று அணுமின் நிலைய வளாக இயக்குனர் சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஊழியர்கள் தேர்வு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்ததாரர்கள் பணி ஒதுக்கீடு மற்றும் அவர்களது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தல் என அனைத்தும் வங்கி மூலமாகவே பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. வங்கி கொடுக்கும் ஆவணங்களை சரி பார்த்த பிறகே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக இதுவரை எந்தவித புகார்களும் அணுமின் நிலைய நிர்வாகத்துக்கு வரவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆட்களை தேர்வு செய்வது ஒளிவு மறைவு இன்றி நடைபெறுகிறது. இங்கு பணிபுரிய பிற நிறுவனங்களில் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையிலேயே ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

6 ஆயிரம் வீடுகள்

இதுதவிர கூடங்குளம் சுற்று வட்டார பகுதி வளர்ச்சிக்காக தமிழக அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் ரூ.300 கோடியில் வீடு இல்லாத மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மீதி உள்ள வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ரூ.270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Next Story