குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
வையம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வையம்பட்டி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி, சூரமடை மற்றும் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
காவிரி குடிநீர் இருந்தும் கூட அதை முறையாக வினியோகம் செய்யாததால் தான் இதுபோன்ற நிலை உள்ளது. ஆகவே முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பட்டி என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் மற்றும் வையம்பட்டி போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story