திருமயம் அருகே மாட்டு வண்டி பந்தயம்


திருமயம் அருகே மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 30 March 2018 4:00 AM IST (Updated: 30 March 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

திருமயம்,

திருமயம் அருகே இளஞ்சாவூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு முக்குலத்தோர் சார்பாக 8-ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுகளும், மாட்டின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என பந்தயம் இரண்டு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வைத்தி என்பவருடைய மாடு முதல் பரிசை தட்டி சென்றது.

குழிமணிப்பட்டி பிரபு தேவர் மாடு இரண்டாவது பரிசை பெற்றது. மூன்றாவது பரிசை கடியாபட்டி பவ தாரணி மாடு பெற்றது.

பரிசுகள்

சின்னமாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் சிவகங்கை மாவட்டம் விராமதி செல்வராஜ் என்பவரது மாடு முதல் பரிசை தட்டி சென்றது. புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூரை சேர்ந்த ஆசிரியர் ரவிசந்திரன் மாடு இரண்டாவது பரிசை பெற்றது. திண்டுக்கல் மாவட்டம் புகழேந்தி என்பவரது மாடு மூன்றாவது பரிசை தட்டி சென்றது.இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.மேலும் திருமயம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். 

Next Story