தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பாதம் கழுவும் நிகழ்ச்சி
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தை புனித வெள்ளிக்கிழமையாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். அதற்கு முந்தின நாள் இரவில் ஏசு கிறிஸ்து தன்னுடைய 12 சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். அதனை நினைவுகூறும் விதமாக, தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தூத்துக்குடி சின்னக்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், பிஷப் இவோன் அம்புரோஸ் கலந்து கொண்டு, முதியோர்களின் கால்களை கழுவி முத்தமிட்டார். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல், பனிமயமாதா ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி
கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் நேற்று மாலையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. பங்குதந்தை பீட்டர் அடிகளார் 6 முதியவர்கள், 6 மூதாட்டிகளின் பாதங் களை கழுவி முத்தமிட்டார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. கருமாத்தூர் தூய அருளானந்தர் கல்லூரி செயலாளர் மணிவளன் அடிகளார், உதவி பங்குதந்தை ஜேம்ஸ் ஸ்டாலின், குருக்கள் அந்தோணிராஜ், பேசில் செபாஸ்டஸ் சிங் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story