நாகர்கோவில் அருகே பட்டப்பகலில் துணிகரம் ஆசிரியை வீட்டில் நகை- பணம் திருட்டு
நாகர்கோவில் அருகே பட்டப்பகலில் ஆசிரியை வீட்டில் நகை- பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஆத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் ரதீஷ்(வயது 36). டிரைவர். இவரது மனைவி பானுமதி. இவர் வல்லன்குமாரன்விளையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்துவருகிறார். ரதீஷ் டிராவல்ஸ் வாகனம் ஓட்டி வருவதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இவர்கள் வெளியில் செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை மின்சார மீட்டர் பெட்டியில் வைத்து செல்வது வழக்கம்.
சதீஷ் நேற்று காலையில் திருச்சிக்கு சவாரி செல்வதாக சென்று விட்டார். பானுமதி வீட்டை பூட்டி மின்சார மீட்டர் பெட்டியில் சாவியை வைத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் ரதீசுக்கு திருச்சிக்கு சவாரி கிடைக்காததால் மதியம் திடீர் என்று வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த ஒரு பவுன் கம்மல் மற்றும் ரொக்கப்பணம் 17 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.
மேலும் பீரோவில் இருந்த ஏராளமான கவரிங் நகைகளும் திருடப்பட்டு இருந்தன.
போலீசார், மோப்ப நாய் மூலம் துப்பு துலக்கி பிடித்து விடக்கூடாது என்பதற்காக வீட்டு உள்ளேயும், வீட்டை சுற்றியும் மர்ம ஆசாமிகள் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்று உள்ளனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.
பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீட்டர் பெட்டியில் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.
எனவே இந்த கைவரிசையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் அந்த வீட்டை பற்றி தெரிந்த உள்ளூர் ஆசாமிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து தீவிரமாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் அந்த வீட்டில் இருந்த ஏராளமான கவரிங் நகைகளை உண்மையான தங்க நகைகள் என்று மர்ம ஆசாமிகள் அள்ளி சென்று உள்ளனர். இந்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story