மதசார்பற்ற ஓட்டுகள் பிரிவதை தடுக்க வியூகம் வகுக்க வேண்டும் சித்தராமையாவிடம் கோரிக்கை
மதசார்பற்ற ஓட்டுகள் பிரிவதை தடுக்க வியூகம் வகுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் அரசியல் சாசன பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்தது.
பெங்களூரு,

அரசியல் சாசன பாதுகாப்பு குழு
முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று அரசியல் சாசன பாதுகாப்பு குழு நேரில் சந்தித்து பேசியது. அந்த குழுவை தலைமையேற்று வழிநடத்திய ஏ.கே.சுப்பையா, சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற ஓட்டுகள் பிரிவதை தடுக்க வியூகம் வகுக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் மதவாத கட்சி வெற்றி பெறக்கூடாது என்றும் மனு கொடுத்து கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலிப்பதாக சித்தராமையா உறுதியளித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு ஏ.கே.சுப்பையா நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் தேவேகவுடாவை நேரில் சந்தித்து, மதசார்பற்ற கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினோம். அவரும் சாதகமான பதிலை கூறினார். மதசார்பற்ற ஓட்டுகளை ஒருங்கிணைக்க நான் தயார் என்று அவர் உறுதியளித்தார். எந்தெந்த தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது என்று பட்டியலை தேவேகவுடா கேட்டார். ஆனால் இதற்கு குமாரசாமி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
வியூகம் வகுத்து...
ஆயினும் நாங்கள் எங்கள் முயற்சியை கைவிடவில்லை. இன்று (அதாவது நேற்று) சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினோம். மதசார்பற்ற ஓட்டுகள் பிரியாமல் இருக்க தேவையான வியூகம் வகுத்து செயல்பட வேண்டும் என்று கூறினோம். காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவில்லை.
ஆனால் மதவாத கட்சி ஆட்சிக்கு வருவதை தடுக்க தேவையான வியூகங்களை வகுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம். காங்கிரசை தொலைவில் வைத்துவிட்டு பா.ஜனதாவை தோற்கடிக்க முடியாது. காங்கிரசை சேர்த்துக் கொண்டு பா.ஜனதாவை தோற்கடிக்க திட்டம் வகுக்க வேண்டியது அவசியம். மதசார்பற்ற கட்சிகள் இடையே போட்டி எழுந்தால், அது மதவாத கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்துவிடும் என்பது தான் எங்களின் கவலை. அதற்கு வாய்ப்பு வழங்கக் கூடாது.
இவ்வாறு ஏ.கே.சுப்பையா கூறினார்.

Related Tags :
Next Story