மத்திய அரசின் வாக்குறுதியை ஏற்று அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்தார்
கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மராட்டியத்தை சேர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.
மும்பை,
லோக்பால் அமைக்கக்கோரி டெல்லியில் 7 நாட்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே முடித்து கொண்டார்.

லோக்பால்
மத்திய, மாநில அரசு பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் லஞ்சம், ஊழலை தடுக்கும் வகையில் மத்தியில் லோக்பால் மற்றும் அனை த்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்புகளை உருவாக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங் கினார்.
அவரது போராட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்தது. இதனால் கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக்அயுக்தா மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டது. இதைத்தொடர்ந்து ஜனாதிபதி கையெழுத்திட்டு, 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அந்த சட்டம் அமலுக்கு வந்தது.
ஆனால் மத்திய அரசு இதுவரை லோக்பால் அமைப்பை உருவாக் கவில்லை. இதேபோல பல மாநிலங்களில் லோக் அயுக்தாவும் அமைக் கப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியும், அதனை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை என்று அன்னா ஹசாரே குற்றம் சாட்டினார்.
மீண்டும் உண்ணாவிரதம்
இதனால் லோக்பால் மற்றும் லோக்அயுக்தா அமைப்புகளை உருவாக்க கோரியும், வேளாண் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் கடந்த 23-ந் தேதி முதல் 80 வயது அன்னா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங் கினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 7 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசின் தூதுவராக மராட்டிய முதல்-மந்திரி ேதவேந்திர பட்னாவிஸ் நேற்று அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத மேடைக்கு சென்றார். அவருடன் மத்திய விவசாயத்துறை இணை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் சென்றிருந்தார். அவர்கள் அன்னா ஹசாரேயிடம் லோக்பால் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை ஆகிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதி கடிதத்தை அவரிடம் கொடுத்தனர்.
மேலும் மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் அந்த கடிதத்தை மேடையில் நின்றபடி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் படித்து காட்டினார்.
இளநீர் கொடுத்து...
இதையடுத்து மத்திய அரசின் வாக்குறுதியை ஏற்று தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்வதாக அன்னா ஹசாரே அறிவித்தார். அவருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இளநீர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
பின்னர் தனது ஆதரவாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, விரைவில் லோக்பால் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்து உள்ளது. அதன்படி மத்திய அரசுக்கு இன்னும் 6 மாதம் அவகாசம் கொடுக்கிறேன்.
அதற்குள் லோக்பால் அமைக்காவிட்டால் மீண்டும் செப்டம்பர் மாதத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
5 கிலோ உடல் எடை குறைந்தார்
கடந்த ஒருவார காலமாக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தால் அன்னா ஹசாரே உடல் மெலிந்து காணப்பட்டார். உண்ணா விரதம் காரணமாக அன்னா ஹசாரேயின் உடல் எடை 5 கிலோ வரை குறைந்திருப்பதாக அவரது உதவியாளர் தத்தா அவாரி தெரிவித்தார்.
முன்னதாக மத்திய மந்திரியும், மராட்டிய முதல்-மந்திரியும் இருந்தபோது அன்னா ஹசாரேயின் மேடையை நோக்கி ஒருவர் ஷூவை வீசினார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story