கூடுவாஞ்சேரி அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு
கூடுவாஞ்சேரி அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு தமிழ்செல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவருடைய மகன் நயிம் அக்தர்(வயது 16). இவர், நந்திவரம் மலைமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
மகாவீர் ஜெயந்தி, புனிதவெள்ளியையொட்டி பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நயிம் அக்தர், தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து நேற்று பாண்டூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச்சென்றார்.
கிணற்றில் மூழ்கி பலி
கிணற்றில் நண்பர்கள் அனைவரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் தெரியாததால் நயிம் அக்தர் திடீரென நீரில் மூழ்கினார். இதனை அவரது நண்பர்கள் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து நயிம் அக்தர் மாயமானதை அறிந்த அவர்கள், கிணற்றுக்குள் மூழ்கி தேடிப்பார்த்தனர்.
அப்போது நீருக்குள் மூழ்கி இருந்த நயிம் அக்தரை நண்பர்களே மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், நயிம் அக்தர் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான நயிம் அக்தரின் சக நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story