பேருந்து நிலையத்துக்குள் அரசு பஸ்கள் செல்ல அனுமதி மறுப்பு
நுழைவு கட்டணம் செலுத்தாததால் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்குள் அரசு பஸ்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் நகராட்சி கட்டுப்பாட்டில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. தினசரி இங்கு 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்துக்குள் பஸ்கள் செல்வதற்கு ஒரு நாளுக்கு ரூ.12 வசூலிக்க நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதன்படி வரும் பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை பயன்பாட்டிற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டு, அதற்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வாடகையை நகராட்சி நிர்வாகம் கேட்டதற்கு, அதை செலுத்த அரசு போக்குவரத்து கழகம் மறுத்துவிட்டது.
மேலும் பேருந்து நிலையத்துக்குள் இருந்த கடை முன்பு தகரத்தால் ஆன செட் அமைக்கப்பட்டது. இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடை உரிமையாளரும் வாடகை செலுத்த மறுத்து விட்டார். இதையடுத்து அந்த செட் பேருந்து நிலையத்துக்குள் வேறொரு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் போக்குவரத்து கழக பணிமனை மேலாளர், பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் செல்வதற்கு யாரும் நுழைவு கட்டணம் செலுத்தக்கூடாது என ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்குள் செல்லும் அரசு பஸ்களுக்கு நுழைவு கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் கட்டணம் வசூலிப்பவர் நகராட்சி ஆணையாளரிடம் சென்று முறையிட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை 8.15 மணிக்கு நகராட்சி ஆணையாளர் லட்சுமி, பொறியாளர் அருண் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் போலீசாருடன் பேருந்து நிலையத்துக்கு வந்தனர்.
நுழைவு வாயிலில் நின்ற அவர்கள், நுழைவு கட்டணம் செலுத்தாத விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை பஸ்களை பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் சென்னை, சேலம், கடலூர், திருவண்ணாமலை, பெங்களூரு, திருப்பதி, சிதம்பரம், திருக்கோவிலூர் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் செல்லவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பஸ்கள் பயணிகளின்றி சென்றதை காணமுடிந்தது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
வெளியூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ்கள், பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் அங்கேயே இறக்கிவிடப்பட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் நேற்று மதியம் 2 மணி வரை விரல் விட்டு எண்ணும் வகையிலேயே பயணிகள் இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகளுடன் போக்குவரத்து பணிமனை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து பணிமனை மேலாளர், டிரைவர்கள் மற்றும் நடத்துனரிடம் பேருந்து நிலையத்துக்குள் செல்வதற்கான கட்டணத்தை செலுத்துமாறு வாய்மொழி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மதியம் 2.15 மணி முதல் அனைத்து அரசு பஸ்களும் பேருந்து நிலையத்துக்குள் செல்வதற்கான கட்டணத்தை நடத்துனர்கள் செலுத்தினர். அதன் பின்னரே பேருந்து நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story