ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது


ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது
x

ஈரோட்டில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை குறைவாகத்தான் பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகள் வறட்சியாக காணப்படுகிறது. ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளிலும் தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. இந்த நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. நேற்று அதிகபட்சமாக வெயில் அளவு 106 டிகிரியாக பதிவானது.

தற்காலிக கடைகள்

வெயில் காரணமாக நேற்று வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது. ரோடுகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு அனல்காற்று வீசியது.

வெப்பம் காரணமாக ஐஸ்கிரீம் கடைகள், குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. சாலையோர கரும்புச்சாறு (கரும்பு பால்) கடைகளிலும் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது. மேலும் நுங்கு, தர்ப்பூசணி, சர்பத், எலுமிச்சை சாறு விற்பனையும் அதிகமாக இருந்தது. இதையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் ஆங்காங்கே தற்காலிக குளிர்பான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

Next Story