சிவகங்கை மக்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு


சிவகங்கை மக்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு
x
தினத்தந்தி 30 March 2018 5:13 AM IST (Updated: 30 March 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளது என்று புள்ளியியல் துறை துணை இயக்குனர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் ஆணையின்படி தமிழ்நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலை, வருவாய், பணி, வேலைவாய்ப்பு, சுகாதார அணுகுமுறை, கல்வி மற்றும் இடம் பெயர்ப்பு போன்ற காரணங்களினால் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்படும். அனைத்து விவரங்களும் பேப்பர், பேனா எதுவுமின்றி கையடக்க கணினியில் நேரடியாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசியமாக வைக்கப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளும் உள்ளடக்கிய 34 மாதிரிகள் இந்த கணக்கெடுப்பிற்கு தேர்வாகி உள்ளது. இந்த ஆய்வில் சேகரிக்கப்படும் வீட்டைப்பற்றிய பொதுவான கேள்விகள், குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் உடல்நலம், கல்வி, வசதிகள், சொத்துகள், வருமானம் மற்றும் இதர பிற பண்புகள் கையடக்க கணினியில் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள் வரும் காலங்களில் மக்களுக்கு உதவும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளன.

எனவே ஆய்விற்காக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை களப்பணியாளர்கள் பொதுமக்களை அணுகும்போது முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story