வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை இ.பி.காலனியை சேர்ந்தவர் விவேக்பாண்டியன் (வயது 33). இவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மகாராஜன் மகள் சபிதாவுக்கும் (26) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு பாலசுப்பிரமணியன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது 50 பவுன் நகை சீர்வரிசையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். மேலும் மனைவியிடம், கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி விவேக்பாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து சபிதா தனது தந்தையிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் சபிதாவுக்கும், விவேக்பாண்டியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சபிதா வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு, துப்பாட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப் படுகிறது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சபிதாவின் தந்தை மகாராஜன் புகார் செய்தார். அந்த புகாரில், கூடுதல் வரதட்சணை கேட்டு விவேக்பாண்டியன் கொடுமைப்படுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையே நிலக்கோட்டை அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருந்த சபிதாவின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சபிதாவின் சாவுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கூறி, நிலக்கோட்டை நால்ரோட்டில் அவருடைய உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சபிதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜான்சன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story