குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது விபத்து: மினி லாரி– மொபட் மோதல்; தந்தை– மகன் பரிதாப சாவு 3 பேர் படுகாயம்
உவரியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது மினிலாரியும், மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திசையன்விளை,

மினி லாரி– மொபட் மோதல்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் முத்து நாடார் (வயது 48). இவர் நேற்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தனது மகன் பிரதீஷ் (14), மகள் பிரீத்தா (12), மகன் பிரகாஷ் (6) ஆகியோரை செட்டிகுளத்தில் இருந்து மொபட்டில் அழைத்துக் கொண்டு உவரியில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். அவருடைய மனைவியை உவரிக்கு பஸ் ஏறி வரும்படி கூறியுள்ளார்.
திசையன்விளை அருகே உள்ள வல்லான்விளை பக்கத்தில் சென்ற போது எதிரில் வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
தந்தை– மகன் பரிதாப சாவு
இதனால் மொபட்டில் வந்த 4 பேரும் தூக்கி ரோட்டில் வீசப்பட்டனர். அவர்களில் முத்துநாடார், பிரகாஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மகன் பிரதீஸ், மகள் பிரீத்தா, மினி லாரி டிரைவர் கூடங்குளத்தை சேர்ந்த செல்வன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story