வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய இளைஞர்கள்


வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 31 March 2018 3:45 AM IST (Updated: 31 March 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து பெரம்பலூர் அருகே வீடுகளில் இளைஞர்கள் கருப்புக்கொடி ஏற்றினர்.

பெரம்பலூர்,

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதற்காக 6 வார காலத்தினை கால அவகாசமாக குறிப்பிட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டின் கெடு முடிவடைந்த போதும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததது தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் தமிழக அரசும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பெரம்பலூர் அருகே செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட சறுக்கு பாலம் கிராமத்தில் பா.ம.க. சார்பில் இளைஞர்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடியேற்றி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார், விவசாய அணி நிர்வாகி அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் டெல்டா பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத் தனர்.

மேலும் நாடாளுமன்றம் முன்பு எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் தமிழக விவசாய உரிமையை மீட்க முடியாது.

மாறாக மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பும் விதமாக தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசினை சந்தித்து வலியுறுத்துவது, எம்.பி.க்கள் ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இல்லாவிடில் காவிரிநீரை தாரைவார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்றனர்.

Next Story