பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விராலிமலையில் அய்யாக்கண்ணு கூறினார்.
விராலிமலை,
நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்திட வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் குமரி முதல் கோட்டை வரை 100 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கடந்த 1-ந் தேதி குமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் ஒவ்வொரு மாவட்டத்தின் வழியாக சென்று இறுதியில் சென்னை கோட்டையை சென்றடைகிறது. இந்த நடைபயண குழுவினர் நேற்று விராலிமலைக்கு வந்தனர். பின்னர் விராலிமலை கடைவீதி, செக் போஸ்ட் பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகள், விவசாயிகளிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். பின்னர் விராலிமலையில் இருந்து இலுப்பூர் நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
விராலிமலைக்கு வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த நடைபயணத்தின்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அதை கோரிக்கையாக அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளிக்கப்படும். அனைத்து மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஒருமனுவாக தயாரிக்கப்படும். பின்னர் அந்த மனு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து கொடுக்கப்படும். நதிகள் இணைப்பு காவிரி நீர் மேலாண்மை வாரியம், முல்லைப்பெரியார், காவிரி- வைகை-குண்டாறு இணைப்பிற்காக நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும், ஏரி, குளம் கண்மாய்களை தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து இலுப்பூருக்கு அய்யாக்கண்ணு தலைமையில் சென்ற நடைபயணகுழு அப்பகுதியில் உள்ள விவசாயிகளை சந்திந்து பேசினர். பின்னர் கடைவீதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதேபோல வீரப்பட்டி, வயலோகம், குடுமியான்மலை, பரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளை சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து அந்தக் குழுவினர் அன்னவாசலுக்கு நடைபயணமாக சென்றனர். அப்போது பல்லூரணி அருகே உள்ள பிள்ளையார்கோவிலில் நடந்த அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story