அனந்தகுமார் ஹெக்டேவை பா.ஜனதாவில் இருந்து நீக்க கோரி மைசூருவில் அமித்ஷா பங்கேற்ற மாநாட்டில் கூச்சல்-குழப்பம்
மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவை பா.ஜனதாவில் இருந்து நீக்கக்கோரி மைசூருவில், அமித்ஷா பங்கேற்ற மாநாட்டில் தலித் அமைப்பினர் கோஷம் போட்டதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
மைசூரு,
மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவை பா.ஜனதாவில் இருந்து நீக்கக்கோரி மைசூருவில், அமித்ஷா பங்கேற்ற மாநாட்டில் தலித் அமைப்பினர் கோஷம் போட்டதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அமித்ஷா திணறினார்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா
கர்நாடகத்தில் வருகிற மே மாதம் 12-ந் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக மைசூருவுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவே மைசூருவுக்கு வந்த அவர், நேற்று காலையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு சுத்தூர் மடத்திற்கு சென்றார். அங்கு சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமியை சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
அதையடுத்து மடாதிபதியுடன் சுமார் அரை மணி நேரம் தேர்தல் சம்பந்தமாக ரகசிய ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து மைசூரு அரண்மனைக்கு சென்றார். அங்கு ராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது தேர்தல் சம்பந்தமான பேச்சுவார்த்தை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்படி ராணி பிரமோதா தேவியிடமும், இளவரசர் யதுவீரிடமும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இளவரசர் பதில் சொல்லவில்லை
ஆனால் அமித்ஷாவின் கோரிக்கைக்கு ராணியும், இளவரசரும் எந்தவித பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மவுனமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து யதுவீர் தனது குழந்தை ஆத்யவீர் உடையாரை தூக்கி வந்து அமித்ஷாவிடம் காட்டினார். அமித்ஷாவும், ஆத்யவீரை கொஞ்சி மகிழ்ந்து ஆசீர்வாதம் செய்தார்.
பின்னர் மைசூரு கேத்தமாரனஹள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பா.ஜனதா தொண்டர் ராஜூவின் வீட்டிற்கு அமித்ஷா சென்றார். அங்கு அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அனந்தகுமார் ஹெக்டே மீது நடவடிக்கை
அதையடுத்து அவர் அங்கிருந்து மைசூரு ராமானுஜ ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த பா.ஜனதா ஆதிதிராவிடர் பிரிவினர் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டுக்கு சீனிவாஸ் பிரசாத் தலைமை தாங்கினார். மாநாடு நடந்து கொண்டிருந்தபோது கூட்டத்தில் கலந்து கொண்ட தலித் சங்கர்ஷ சமிதியைச் சேர்ந்த சிலர், மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
மேலும் டாக்டர் அம்பேத்கர் குறித்து விமர்சித்து பேசிய அனந்தகுமார் ஹெக்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவரை பா.ஜனதாவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷம் போட்டனர்.
கூச்சல், குழப்பம்
இதற்கு பதில் அளித்து பேசிய அமித்ஷா அனந்த குமார் ஹெக்டேவின் பேச்சுக்கும், பா.ஜனதாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். இதனால் மேலும் கோபம் அடைந்த தலித் அமைப்பினர், அப்படியானால் உடனே அனந்த குமார் ஹெக்டேவை கட்சியில் இருந்து நீக்குங்கள் என்று கூச்சல் போட்டனர்.
இதனால் கூட்டத்தின் நடுவே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அமித்ஷா எந்தவொரு பதிலும் கூற முடியாமல் திணறினார். பிறகு அங்கிருந்து உடனடியாக கூட்டத்தை முடித்துக்கொண்டு நஞ்சன்கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று பூஜை செய்தார்.

Related Tags :
Next Story